சுகாதார ஆய்வாளர்கள் தர்ணா போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவ, சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு மாவட்ட சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குணசேகர் முன்னிலை வகித்தார். இதில் 2715 சுகாதார ஆய்வாளர் காலி பணியிடங்களால் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
எனவே உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட வேண்டும் என கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள், சுகாதார ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement