கூட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்டவர் கைது
கூட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,யை
கீழே தள்ளிவிட்டவர் கைது
தலைவாசல்:
கோவில் விழா கூட்டத்தில், எஸ்.எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்ட தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.
தலைவாசல் அருகே, தேவியாக்குறிச்சி கிராமத்தில், கோவில் திருவிழா தொடர்பாக நேற்று முன்தினம், ஊர் மக்களுடன் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தலைவாசல் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன், 50, அங்கிருந்தவர்களை கலைந்து செல்லும்படி கூறியுள்ளார். அப்போது, தேவியாக்குறிச்சி, இந்திரா நகரை சேர்ந்த, பாலையன் மகன் மணிகண்டன், 39, கூலித் தொழிலாளியான இவர், எஸ்.எஸ்.ஐ., மணிகண்டனிடம் வாக்குவாதம் செய்து, கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் புகார்படி, தொழிலாளி மணிகண்டன் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குப்பை கொட்டும் இடமாக மாறிய பேருந்து பணிமனை குடிநீர் கிணறு
-
பள்ளி மாணவியருக்கு தொந்தரவு சிறுவர்கள் கைது: வாலிபர் 'எஸ்கேப்'
-
நிறம் மாறி மாசடைந்து வரும் நாகராஜகண்டிகை நீரோடை
-
சாலை நடுவே கொடி கம்பம் நெடுஞ்சாலை துறை அகற்றுமா?
-
போதை மாத்திரை பதுக்கி விற்ற நான்கு பேர் கைது
-
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழக அணி 'சாம்பியன்'
Advertisement
Advertisement