பஸ்சில் உட்கார்ந்தபடியேபரோட்டா மாஸ்டர் சாவு


பஸ்சில் உட்கார்ந்தபடியேபரோட்டா மாஸ்டர் சாவு


சேலம்:சேலம் வந்த, சென்னை பரோட்டா மாஸ்டர், பஸ்ஸில் உட்கார்ந்தபடியே உயிரிழந்தார்.
சென்னை புழல், கே.எப்., நகரை சேர்ந்தவர் ரவிக்குமார், 51, இவர் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கரூரில் இருந்து சேலத்துக்கு, மகாலிங்கம் என்பவருடன், நேற்று முன்தினம் சேலம் வந்துள்ளார். பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன், அவரை எழுப்பிய போதும் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து கிடந்தது கண்டு மகாலிங்கம் அதிர்ச்சியடைந்தார். பள்ளப்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement