கொலை மிரட்டல்விடுத்த ரவுடி கைது


கொலை மிரட்டல்விடுத்த ரவுடி கைது

அயோத்தியாப்பட்டணம், அயோத்தியாப்பட்டணம், பெரியகவுண்டா புரத்தை சேர்ந்தவர் சபரிராஜ், 37. இவர் நேற்று காலை 7:00 மணிக்கு, வேலைக்கு செல்ல அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது, ஒருவர் கத்தியை கழுத்தில் வைத்து, நான் பெரிய ரவுடி என கூறி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் சபரி ராஜ், பயத்தில் சட்டை பாக்கெட்டில் இருந்த, 1,000 ரூபாயை கொடுத்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சபரிராஜ் கொடுத்த புகார்படி, காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி வெள்ளியம்பட்டியை சேர்ந்த அஜித் குமார், 28, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement