மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை

ராமநாதபுரம்:- ராமேஸ்வரத்தில் மனைவியின் கள்ளக்காதலனை ஆட்டோ ஏற்றி கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமேஸ்வரம் எரகாடு பகுதியை சேர்ந்தகோவிந்தன் மகன் தர்மராஜ் 35. ஆட்டோ ஓட்டி வந்தார். மனைவி தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகமடைந்துள்ளார். மனைவியின் கள்ளக் காதலனாக அதே பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மாரிபிச்சை மகன் பூமிவேல் 38, மீது சந்தேகம் அடைந்தார்.
இதையடுத்து 2018 மே 18ல் பூமிவேல் மீது ஆட்டோவை ஏற்றிக் கொலை செய்ய முயன்றார். அவர் தப்பியதால் அவரை அரிவாளால் வெட்டியதில் காயமடைந்தார். போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்தது. தர்மராஜிற்கு 7 ஆண்டு சிறை தண்டனைய, ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி மோகன்ராம் தீர்ப்பளித்தார்.
மனைவியை 2024 அக்.,7 ல் கொலை செய்த வழக்கில் தர்மராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.