வடமாநில மளிகை கடைக்காரரைபணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது
வடமாநில மளிகை கடைக்காரரைபணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது
ஈரோடு:ஈரோடு கிழக்கு கொங்காலம்மன் கோவில் வீதியில், ரகுவர்சிங் என்பவர் மகா சிவசக்தி ஸ்டோர்ஸ் மளிகை கடை நடத்தி வருகிறார். வீரப்பன்சத்திரம், பாரதி நகரை சேர்ந்த, புதிய இந்தியா பத்திரிக்கை நிருபர் கோகுல்ராஜ், 29, மற்றும் இருவர், ரகுவர்சிங் கடை முன்புறம் சிறிது நேரம் நேற்று அமர்ந்திருந்தனர். பின்னர் அவரிடம் மொபைல்போன் எண் பெற்று சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கூல் லீப் விற்பதாகவும், போலீசாருக்கு தெரிவிக்காமல் இருக்க பணம் வேண்டும் என்று போனில் மிரட்டியுள்ளார். பின் நேரில் சென்றும் தகராறு செய்துள்ளார். டவுன் கிரைம் போலீசில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் சென்றனர்.
கோகுல்ராஜ், பி.பெ.அக்ரஹாரம் அய்யாதுரை வீதி ஆட்டோ டிரைவர் சாதிக், 30; பி.பெ.அக்ரஹாரம், மேஸ்திரி சந்தை சேர்ந்த கார்மெண்ட்ஸ் தொழிலாளி தினகரன், 34; மூலப்பாளையம் பாரதி நகர் கார் டிரைவர் காஜாமைதீன், 33; பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பெயிண்டர் வெங்கடேஷ், 29, தனுஷ்ராஜ், 20, என ஆறு பேரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ரகுவர்சிங்கை பணம் கேட்டு மிரட்டியது உறுதியானதால், ஆறு பேரையும் கைது செய்தனர் .