கஸ்டமரை தாக்கிய ஊழியர்கள்; பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் முற்றுகை


கஸ்டமரை தாக்கிய ஊழியர்கள்; பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் முற்றுகை


சத்தியமங்கலம்,சத்தியமங்கலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் செயல்படுகிறது. சத்தி அருகே ஜல்லியூரை சேர்ந்த கனகராஜ், சில நாட்களுக்கு முன், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இங்கு பிரிட்ஜ் வாங்கியுள்ளார்.
கடை தொழிலாளர்கள் வீட்டில் டெலிவரி செய்துள்ளனர். இந்நிலையில் பிரிட்ஜ் அடிபட்டுள்ளதாக கடைக்கு தகவல் தெரிவித்த நிலையில், கடைக்கு நேற்று நேரில் சென்றுள்ளார். அப்போது மேனேஜர் லிங்கம், சூப்பர்வைசர் அருண், மெக்கானிக் சந்திர பிரபாகரன் ஆகியோருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதையறிந்த ஜல்லியூர் பகுதி மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்றிரவு, ௮:௦௦ மணிக்கு கடைக்கு வந்து, கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சத்தி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்தை கடந்து பேச்சுவார்த்தை நீடித்ததால், சாலையில் போக்குவரத்து பாதித்தது. கடை உரிமையாளர் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கவே, 9:20 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement