பேரூராட்சி அலுவலகம் முன்அதிகாலையில் போராட்டம்



பேரூராட்சி அலுவலகம் முன்அதிகாலையில் போராட்டம்


நம்பியூர்:நம்பியூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாதபுரத்தில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மின் மோட்டார் பழுதால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை, 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisement