மூன்று மாதங்களில் இரண்டு பேரை ‛'போக்சோ'வில் சிக்க வைத்த சிறுமி

நாகர்கோவில்:குளச்சலில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 22 வயது வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

இதே மாணவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மற்றொரு நபரை போக்சோ வழக்கில் சிக்க வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரிமாவட்டம் குளச்சல் அருகே உள்ள பிள்ளைத்தோப்பை சேர்ந்த 22 வயது வாலிபர் வீட்டில் இருந்து மாயமானார்.

அவரை பல இடங்களில் தேடிய நிலையில் நாகர்கோவில் பகுதியில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டார். அவருடன் 17 வயது சிறுமி ஒருவரும் இருந்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது பல தகவல்கள் வெளிவந்தது.

அந்த நபருடன் இருந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வீடு எடுத்து தாங்கியுள்ளனர்.

இதற்கு மாணவியின் பெற்றோரும், உறவு பெண் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்தது.

பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி புகாரில் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் வாலிபர், மாணவியின் பெற்றோர், உறவுப் பெண் கைது செய்யப்பட்டனர்.

இதே மாணவி கடந்த மூன்று மாதத்திற்குமுன் ஒரு வேறொரு வாலிபருடன் பழகி அவருடன் சென்றுள்ளார். பின்னர் போலீசார் மீட்டனர். அந்த வாலிபரை நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement