புது நியாய விலை கட்டடம் ஆனைக்குன்னத்தில் எதிர்பார்ப்பு

அச்சிறுபாக்கம்:ஆனைக்குன்னம் கிராமத்தில், நியாய விலைக் கட்டடம் சேதமடைந்து உள்ளதால் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே ஆனைக்குன்னம் கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் நியாய விலைக் கட்டடம் கட்டப்பட்டது.

தற்போது பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன.

கட்டடத்தின் சில பகுதிகள் சிறுக சிறுக இடிந்து விழுந்து வருகின்றன.

எனவே, பழைய நியாய விலை கட்டடத்தை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி, பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே பகுதியில் புதிதாக கட்டடம் கட்டித் தர வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement