காட்டேஜ் உரிமையாளர் எரித்துக்கொலை

கொடைக்கானல்:கொடைக்கானலில் காட்டேஜ் உரிமையாளர் எரித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கொடைக்கானல் குருசரடி மெத்து பெரும்பள்ளத்தை சேர்ந்தவர் சிவராஜன் 58; பெரும்பள்ளம் பகுதியில் காட்டேஜ் நடத்தினார்.

போதைக்கு அடிமையான இவர் மதுரை அழகர் கோயில் அருகே போதை மீட்பு மையத்தில் சிகிச்சையில் இருந்தார் .அப்போது அங்கிருந்தவர்களுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார்.

அங்கு சிகிச்சைக்கு வந்த மணிகண்டன் 28, உட்பட சிலர் கொடைக்கானல் வந்து சிவராஜன் காட்டேஜில் தங்கினர். இவர்களுக்குள் தகராறு ஏற்பட சிவராஜன் தாக்கப்பட்டு இறந்தார். இதனிடையே சிவராஜனை காணவில்லை என சில நாட்களுக்கு முன் கொடைக்கானல் போலீசில் தாய் ருக்குமணி புகார் செய்தார்.

இதனிடையே சிவராஜன் அறையில் ரத்தக்கறை படிந்திருப்பதாக காட்டேஜ் பணியாளர் கூற சந்தேகமடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிவராஜனை கொலை செய்து காட்டேஜ் அருகே எரித்தது குறித்து மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

அதன்படி காட்டேஜ் அருகே பாதி எரிந்த நிலையிலிருந்த சிவராஜன் உடலை மீட்டனர். மணிகண்டனிடம் இக்கொலையில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement