தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை மையம்: அனைத்து நகரங்களிலும் அமைக்க முடிவு

சென்னை: சட்டசபையில், அமைச்சர் நேரு வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
* கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்துார், செங்கல்பட்டு, திருக்கோவிலுார், திருச்செந்துார் ஆகிய நகராட்சிகளில், 142.68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிலைய பணிகள் மேற்கொள்ளப்படும்
* கரூர், கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி மாநகராட்சிகள், திருவேற்காடு, தென்காசி, பூந்தமல்லி, பொள்ளாச்சி, மறைமலைநகர், வாணியம்பாடி உள்ளிட்ட நகராட்சிகளில், 704.76 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும்
* மாநகராட்சிகள், நகராட்சிகளில் பசுமை வெளிகளை அதிகரிக்கும் வகையில், 27.26 கோடி ரூபாய் மதிப்பில், 50 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்
* மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், 311.78 கோடி ரூபாய் மதிப்பில், 69,500 எல்.இ.டி., தெரு விளக்குகள் அமைக்கப்படும். 45,700 பழைய தெரு விளக்குகள், புதிய எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படும்
* 25 நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தி, நடைபாதைகள், பசுமைவெளி பூங்காக்கள், 19.53 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்
* மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கருத்தடை மையங்கள் அமைக்கப்படும்
* கடலுார், ஓசூர், துாத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாநகராட்சிகள், சிவகங்கை உள்ளிட்ட நகராட்சிகளில், 27.47 கோடி ரூபாய் மதிப்பில் எரிவாயு தகன மேடைகள் மேம்படுத்தப்படும்
* அரசு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பள்ளிகளுக்கு தேவையான புதிய வகுப்பறைகள், இதர உட்கட்டமைப்பு வசதிகள், 87.10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும். பழுதடைந்த பள்ளி கட்டடங்கள், 52.26 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்
* தாம்பரம் மாநகராட்சியில், 750 கோடி ரூபாய், விருதுநகர் நகராட்சியில், 50 கோடி ரூபாய் மதிப்பில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்
* நகர்ப்புற உள்ளாட்சிகளில், 3,750 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்கப்படும்.
* மேலும், 870 கி.மீ., நீளத்திற்கு, 481 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்படும்
* திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய, மூன்று தேர்வு நிலை நகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
* நந்திவரம், கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம் ஆகிய முதல் நிலை நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சியாகவும், மாங்காடு, குன்றத்துார், வெள்ளக்கோவில், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
* பேரூராட்சிகளில் நீண்ட காலமாக செயல்பாட்டில் இருந்து வரும் குடிநீர் குழாய்கள், 15 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றி அமைக்கப்படும்
* பேரூராட்சிகளில் அனைத்து பருவ காலத்திலும் பயன்படுத்தும் வகையில், 295 கோடி ரூபாய் மதிப்பில், 360 கி.மீ., நீள மண் சாலைகள், தார் மற்றும் கான்கிரீட், பேவர் பிளாக் சாலைகளாக மாற்றப்படும். பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகள், 670 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும்
* வடிகால்கள், ஓடைகள், ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ஆங்காங்கே நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், சிறிய அளவிலான தனி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
* பேரூராட்சிகளில், 1.50 லட்சம் எண்ணிக்கையில், எல்.இ.டி., தெருவிளக்குகள், 65 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.









மேலும்
-
காஞ்சியில் 32 பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி பணி தீவிரம்
-
திடக்கழிவுகள் மேலாண்மைக்கு 'துாய்மை இயக்கம்' அமைப்பு; துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
-
அமெரிக்க வரி விதிப்பு குறித்து பார்லி.,யில் விவாதிக்காதது ஏன்? கேள்வி எழுப்புகிறார் சிதம்பரம்
-
'அக்ரி ஸ்டேக்' பதிவு எங்கிருந்தும் செய்யலாம்
-
லண்டன் கல்லுாரியில் மம்தாவை 'மடக்கிய' மார்க்சிஸ்ட் மாணவர்கள்
-
தங்க மணல் என கூறி ரூ.68 லட்சம் மோசடி; நாமக்கல் தொழிலாளிகளை ஏமாற்றிய கும்பல்