மருத்துவ கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள கிணற்றில் ஏராளமான மருத்துவக் கழிவுகளை கொட்டியுள்ளனர். அவற்றை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் ரோட்டில் அம்மா பூங்கா எதிரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. இதன் அருகே குடிநீர் கிணற்றில் பாலிதீன் குப்பையுடன் ஏராள ஆணுறைகள் கொட்டப்பட்டுள்ளது. இவை காலாவதியான ஆணுறை பாக்கெட்டுகளாக இருக்கலாம்.

மருத்துவக் கழிவுகளை மக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் கொட்டியுள்ளனர். உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி அந்த கிணற்றை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.

Advertisement