கண்டமங்கலம் தாலுகா ஏற்படுத்த வேண்டும் சட்டசபையில் லட்சுமணன் எம்.எல்.ஏ., கோரிக்கை

விழுப்புரம் : கண்டமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகாவை ஏற்படுத்த வேண்டும் என லட்சுமணன் எம்.எல்.ஏ., சட்டசபையில் வலியுறுத்தினார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில், நேற்று நடந்த வருவாய்துறை மானிய கோரிக்கை, கேள்வி நேரத்தின்போது பேசுகையில், 'வானுார் மற்றும் விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 46 கிராமங்கள் உள்ளன. அதில் 31 கிராம ஊராட்சிகள் விழுப்புரம் தாலுகாவிலும், 15 கிராம ஊராட்சிகள் விக்கிரவாண்டி தாலுகாவிலும் அமைந்துள்ளது.

எனவே, கண்டமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகாவை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

அதற்கு பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன், பல்வேறு தாலுகா ஏற்படுத்த கோரிக்கைகள் வந்துள்ளது. தகுதியானதை பார்த்து அரசு நடவடிக்கை எடுக்கும். கண்டமங்கலம் பகுதி தகுதியானதாக இருப்பதாக கூறியுள்ளதால், நிச்சயமாக செய்து கொடுப்போம்' என்றார்.

Advertisement