பாதாள சாக்கடை பணிகள் துவக்கம்

திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 41, 84, 86, 89முதல் 100 வரை 15 வார்டுகளில் ரூ. 292.80 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை திருப்பரங்குன்றம் பாண்டியன் நகர் பூங்காவில் நடந்தது.

மேயர் இந்திராணி பொன் வசந்த் துவக்கி வைத்தார். துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் பார்த்தசாரதி, கவுன்சிலர்கள் இந்திரா காந்தி, ரவிச்சந்திரன், சிவசக்தி, விஜயா, தமிழ்ச்செல்வி, வாசு கருப்பசாமி, செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி, சுகாதார ஆய்வாளர் திருமால், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர்.

Advertisement