விழிப்புணர்வு ஊர்வலம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி சார்பில் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். எய்ம்ஸ் இயக்குநர் அனுமந்தராவ் முன்னிலை வகித்தார். காசநோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் துவங்கி ராமேஸ்வரம் ரோடு வழியாக கல்லுாரி வரை ஊர்வலமாக சென்றனர். மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement