கிராமங்களில் வயிற்றுப்போக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
கம்பம் மாவட்டத்தில் பகலில் கடும் வெப்பம் நிலவி வருவதால் கிராமங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பகலில் உச்சபட்ச வெப்பம் நிலவுகிறது. மாலையிலும் அனல் காற்று வீசுகிறது. இந்த அதிக வெப்பம் காரணமாக மனித உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக சின்ன அம்மை, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் சுகாதாரத் துறை ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம செவிலியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது.
மாசுபட்ட குடிநீர் வழியாக இந்த தொற்று நோய் பரவ வாய்ப்பு அதிகம்.
எனவே குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேசன் செய்ய ஊராட்சிகளை வலியுறுத்த வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்கவும், அதிக தண்ணீர் அருந்தி நீர்ச்சத்து இழப்பை தடுக்கவும் பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும். கிராம செவிலியர்கள், கிராமங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வயிற்றுப் போக்கு காணப்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் ஓ.ஆர்.எஸ். கரைசல் தயார் நிலையில் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
தங்கம் வென்றார் மணிஷா * ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
-
ஐந்து தங்கம் வென்றது தமிழகம் * கிராண்ட்ப்ரி தடகளத்தில் அபாரம்
-
சென்னை, மதுரையில் ஜூனியர் உலக ஹாக்கி
-
ஸ்குவாஷ்: அனாஹத் சாம்பியன்
-
மாரடோனாவின் மரண வேதனை...
-
டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்காது; எண்ணெய் நிறுவனம் அறிவிப்பு