புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது

விருத்தாசலம்: பெண்ணாடத்தில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த, புதுச்சேரி மதுபாட்டில்களை கலால் போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

பெண்ணாடத்தில் புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பெண்ணாடம் ஏழுமலையான் நகரில் தனி வீட்டில் பதுங்கியிருந்த, பாரதிதாசன் தெரு ராஜேந்திரன் மகன் ரவிக்குமார், 42, என்பவரை பிடித்து விசாரனை நடத்தினர்.

அவர், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது.

அங்கிருந்து 750 மி.லி., மதுபாட்டில்கள் உட்பட 112 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிந்து, ரவிக்குமாரை கைது செய்தனர்.

Advertisement