மலை கிராமத்தில் கிராம சபை கூட்டம்

மலை கிராமத்தில் கிராம சபை கூட்டம்


பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், 19 பஞ்.,கள், கடத்தூர் ஒன்றியத்தில்,25 பஞ்., களிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஓசஹள்ளி பஞ்.ல் வேடியூரில் நடந்த கிராம சபை கூட்டம் டி.ஆர்.ஓ., கவிதா தலைமையில் நடந்தது.
தாசில்தார் வள்ளி, ஆர்.ஐ., முருகன், வி.ஏ.ஓ., பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சித்தேரி பஞ்.,ல் உள்ள கலசப்பாடி கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அரூர் ஆர்.டி.ஓ.சின்னுசாமி, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் ஜெய் செல்வம், ஒன்றிய ஆணையாளர் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். பின் நீரின் தேவை மற்றும் சிக்கனமாக பயன்படுத்துதல், நீர் நிலைகளை பாதுகாத்தல், பராமரித்தல் குறித்து பேசினர்.

Advertisement