விளையாட்டு போட்டி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பெரிய கையகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 70 வது ஆண்டு விழா, விளையாட்டு போட்டி நடந்தது.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேதுராமு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சகாயம் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் உதயகுமார் வரவேற்றார். மாணவர்களிடையே தனித்தனியாக விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சி நடந்தது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Advertisement