கடிதம் எழுதினேன்... ஆனால் அனுப்பவில்லை; ராஜினாமா முடிவில் பசவராஜ் ஹொரட்டி 'பல்டி'

பெங்களூரு : ''மேல்சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்து, கடிதம் தயார் செய்தது உண்மை தான். ஆனால் அதில் கையெழுத்திடவில்லை. அந்த கடிதம் இன்னும் என்னிடம் தான் உள்ளது. என் ராஜினாமா முடிவை வாபஸ் பெறுகிறேன்,'' என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி 'பல்டி' அடித்தார்.
மேல்சபையில் ஹனிடிராப் விவகாரம் தொடர்பாக நடந்த குழப்பத்துக்கு அதிருப்தி தெரிவித்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, 'என் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். என் நல விரும்பிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்' என்று தெரிவித்திருந்தார்.
மார்ச் 31ம் தேதி
அன்று மாலை, அவரின், 'லெட்டர் பேடில்' மேலவை தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், மார்ச் 31ம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்கும்படியும், துணைத்தலைவர் பிரானேஷுக்கு அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக நேற்று ஹூப்பள்ளியில் பசவராஜ் ஹொரட்டி அளித்த பேட்டி:
நான் ராஜினாமா கடிதம் எழுதி வைத்திருந்தது உண்மை தான். ஆனால், அதில் நான் கையெழுத்திடவில்லை. இந்த கடிதம், என் மேஜையின் கப்போர்டில் வைத்திருந்தேன். அதை யாரோ சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
இதை பார்த்த எம்.எல்.சி.,க்கள் புட்டண்ணா, சி.டி.ரவி, பல்வேறு கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எழுத்தாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் தினமும் எனக்கு போன் செய்து, ராஜினாமா செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
முதல்வர் விளக்கம்
இது தொடர்பாக, ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே என் ராஜினாமா முடிவை கைவிட்டு விட்டேன். இத்தகைய சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை.
மேல்சபை கூட்டத்தொடரில், 'ஹனிடிராப்' தொடர்பாக முதல்வர் சித்தராமையா பதிலளித்துள்ளார். அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதற்கு மத்தியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சபையில் குழப்பத்துக்கு மத்தியில், இதுபோன்று மசோதா தாக்கல் செய்வது என்னை பொறுத்த வரை சரியல்ல. இது மக்களை ஏமாற்றுவதற்கு சமமாகும்.
இம்மாதம் 27ம் தேதிக்கு பின், மேல்சபையின் 75 உறுப்பினர்களுக்கும், மேல்சபை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கடிதம் எழுதுவேன். என் வார்த்தைக்கு மதிப்பு அளிப்பர் என்று நம்புகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் சுயகவுரவத்துக்கு முக்கியத்துவம கொடுக்கின்றனரே தவிர, மக்கள் வளர்ச்சி குறித்து யாரும் விவாதிப்பதில்லை. ஹனிடிராப் தொடர்பாக முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
அபாயகரமான மரங்களின் கிளைகளை அகற்ற திட்டம்
-
கோடை குடிநீர் பற்றாக்குறையை போக்க தலைமை செயலர் தலைமையில் குழு
-
15 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு '35 ஆண்டு'
-
ஒரு பிரியாணிக்கு ரூ.450 என கணக்கு காட்டுவதா? தங்கவயல் நகராட்சியில் காங்., கவுன்சிலர் வெளிநடப்பு!
-
கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பு சிறுமியருக்கு இலவச தடுப்பூசி
-
சதீஷ் - குமாரசாமி சந்திப்பு ஜி.டி.தேவகவுடா சந்தேகம்