நிறுவன உரிமையாளரிடம் ரூ.6.5 கோடி மோசடி; இணைய மோசடி கும்பல் துணிகரம்

5

புதுடில்லி: உத்தரபிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த நிறுவன உரிமையாளர் ஆன்லைன் டேட்டிங் மோசடியில் சிக்கி, 6.5 கோடி ரூபாய் இழந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் தல்சித் சிங், செக்டார் 36 ல் வசித்து வரும் இவர், டில்லியை சேர்ந்த ஒரு நிறுவன உரிமையாளராக உள்ளார்.

இந்நிலையில், ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் முதலீடு செய்தால், எந்தவித முன் அனுபமும் இல்லாமல் லாபம் பெறலாம் என்று தல்சித் சிங்கிடம் ஒரு பெண் கூறி உள்ளார். தல்சித் சிங் அதை நம்பி முதலீடு செய்து ரூ.6.5 கோடியை இழந்தார்.

அவர் போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

முதலில் 40 வயது வர்த்தகர் ஒருவர், சிங்கப்பூரைச் சேர்ந்ததாக கூறிய ஒரு பெண்ணுடன் டேட்டிங் ஆப்பில் தொடர்பு ஏற்படுத்தினார்.

கடந்த 2024 டிசம்பரில் அனிதா சவுகான் என்ற அந்த பெண்,தொடர்பு கொண்டு, என்னிடம் வீடியோ கால்களில் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தினாள்.

அதை தொடர்ந்து கிரிப்டோகரன்சி மற்றும் பாரெக்ஸ் வர்த்தகத்தில் லாபகரமான முதலீட்டு வாய்ப்பு என்று டிரேடிங் தளத்திற்கு அழைத்துச் சென்றாள்.

ஆன்லைன் டேட்டிங் செயலியில் முதலீடு செய்தால் அதிகமான லாபம் ஈட்டலாம். இதற்கு எந்தவித முன் அனுபவமும் தேவையில்லை என்று கூறினார்.

இதை நான் நம்பி, முதற்கட்டமாக, ரூ.32 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு லாபமாக, முதலில் ரூ.24,000 கொடுத்தனர்.

இதை நம்பி நான் கடனாகவும், தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் திரட்டி, ரூ.6.5 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றினேன்.

இந்நிலையில் பணம் தேவைப்பட்டதால், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை.

அப்போதுதான் எனது வங்கி கணக்கு தகவல்கள் தவறானவர்கள் கைக்கு சென்றுவிட்டது என்பதை உணர்ந்தேன். எனது முதலீட்டு தொகையை மீட்டு தர வேண்டும் என்றும், தன்னுடன் பேசிய அனிதா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் புகாரில் தெரிவித்துள்ளார்.

நோய்டா சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,

மோசடியாளர்கள் வெளிநாட்டில் இருந்து போலி அடையாளங்களுடன் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.சர்வதேச மோசடி வலைக்குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று கூறினர்.

Advertisement