மனிதர்களுக்காக படைக்கப்படவில்லை!

சென்னையைச் சேர்ந்த,'ப்ளூ கிராஸ்' தன்னார்வ அமைப்பின் கல்விச் செயற்பாட்டாளர் சமரன்:
எந்த விலங்கும் மனிதர்களுக்காகப் படைக்கப்படவில்லை. நாம் ஆறறிவு பெற்றிருப்பதாலேயே, அவற்றை அடக்குவதற்கான அதிகாரம் பெற்றிருப்பதாகக் கருதுகிறோம். விலங்குகள் சுதந்திரமாக வாழ முடிவதே, அவற்றின் அடிப்படை உரிமையாகக் கருதுகிறேன். அவற்றிடம் இருந்து கிடைக்கும் எந்தப்பொருளும், மனிதர்களுக்கு உரிமையுள்ளது அல்ல!.
முட்டை, பால், இறைச்சி, விலங்குகளின் தோல், அதன் பிற உறுப்புகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் என, எதுவாக இருந்தாலும், ஓர் உயிர் வதைக்கப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
மனிதர்களுக்கு அநீதி நடக்கும் போது சமூக நீதி, சமவாய்ப்பு பற்றிப் பேசும் பலரும், விலங்குகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கக்கூடத் தயங்குகின்றனர். நம்மைச் சார்ந்து வாழும் விலங்குகளைப் பராமரிப்பதும், பாதுகாப்பதும், நம் கடமையாகக் கருத வேண்டும்.
இதை, என் அம்மா கவிஞர் தாமரை, சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுத்ததால், விலங்குகள் நலன் பற்றிய என் புரிதல் மேம்பட்டிருக்கிறது. நான் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடம், கல்வி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
தெருநாய்களை அடிப்பது, துன்புறுத்துவது, விஷம் வைத்துக் கொல்வது, குதிரை மேல் ஏறி சவாரி செய்வது, ஒரே வண்டியில் அளவுக்கதிகமாக விலங்குகளை ஏற்றிச் செல்வது போன்றவற்றைக் குற்றம் எனப் புரிய வைத்தால்தான், குழந்தைகள் பின்னாளில் அதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இதேபோல, விலங்குகளுக்கு ஆதரவாக இருக்கும் சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். சக மனிதனை அடிமைப்படுத்துவது தவறு என்ற புரிதல் ஏற்பட, எவ்வளவு போராட்டங்களும், தொடர் பிரசாரங்கள்களும் நிகழ்த்தப்பட்டனவோ, அவற்றைவிட அதிகமாக விலங்கு உரிமைக்குக் குரல்கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் சாத்தியமாகும். இன்று விதைத்தால் நாளை பயிராகும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும்
-
பாசன கால்வாயை சீரமைக்க ஒதுக்கிய ரூ.6 லட்சம் எங்கே போனது: விவசாயிகளே சொந்த செலவில் சீரமைத்த அவலம்
-
உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கல்
-
தொழில் முனைவோர் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
-
சூதாடிய 5 பேர் மீது வழக்கு
-
புதுப்பொலிவுக்கு மாறும் மின் கட்டண மையங்கள்
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது