ஆசிய கூடைப்பந்து: இந்தியா அபாரம்

சிங்கப்பூர் சிட்டி: ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்றில் அசத்திய இந்திய அணி, மக்காவ், தென் கொரியாவை வென்றது.

சிங்கப்பூரில், ஆசிய கோப்பை கூடைப்பந்து (3x3) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'பி' பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா அணிக்கு ஹர்ஷ் தாகர் (12 புள்ளி), குஷால் சிங் (5), அரவிந்த் முத்து (2), பிரனவ் பிரின்ஸ் (2) கைகொடுத்தனர்.

இரண்டாவது போட்டியில் இந்தியா, மக்காவ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்தியா 21-6 என வெற்றி பெற்றது. இந்திய அணிக்க ஹர்ஷ் தாகர் (12 புள்ளி), அரவிந்த் முத்து (5), குஷால் சிங் (2), பிரனவ் பிரின்ஸ் (2) கைகொடுத்தனர்.
இன்று நடக்கும் 3வது போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் பிரதான சுற்றில் இந்திய அணி 'பி' பிரிவில் சீனதைபே, குவாம் அணிகளுடன் விளையாடலாம்.


பெண்களுக்கான 'பி' பிரிவு தகுதிச் சுற்று முதல் போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்தியா 6-17 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இன்று இந்திய அணி, சீனதைபே, குவாம் அணிகளை எதிர்கொள்கிறது.

Advertisement