29 முதல் 31 வரை350 சிறப்புபஸ்கள் இயக்கம்


29 முதல் 31 வரை350 சிறப்புபஸ்கள் இயக்கம்


சேலம்:சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாட்கள், அமாவாசை, தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜானை முன்னிட்டு வரும், 29 முதல், 31 வரை, 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பயணியர் வசதிக்கு அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம், அதற்கான செயலி வழியே முன்பதிவு செய்து பயணிக்கலாம். வரும், 29ல் பங்குனி அமாவாசையையொட்டி, சேலம், தர்மபுரியில் இருந்து மேட்டூர், மாதேஸ்வரன் மலைக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர்கோவில் பகுதிகளுக்கு, தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப்டயஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement