தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்:தமிழகத்திற்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தர வேண்டிய, 4,034 கோடி ரூபாய் நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து, உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஒன்றிய தி.மு.க., செயலர் குமார் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, கண்டன உரையாற்றினார்.
அப்போது, 400க்கும் மேற்பட்ட நுாள் நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை திரட்டி, நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, படூர் கூட்டுசாலை, எஸ்.மாம்பாக்கம் கூட்டுசாலை, உத்திரமேரூர், தண்டரை, ஆதவப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை தாண்டியது!
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
Advertisement
Advertisement