உத்திரமேரூரில் ரூ.22.61 கோடியில் நீதிமன்ற கட்ட அடிக்கல் நாட்டு விழா

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் உள்ள எண்டத்தூர் சாலையில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல், 25 ஆண்டுகளாக, வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் கட்ட, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், மத்திய அரசின் நீதித் துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் திட்டத்தின்கீழ், 22.61 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ஆகியவை கட்டும் பணிக்கான, அடிக்கால் நாட்டு விழா உத்திரமேரூரில் நேற்று நடந்தது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர் பங்கேற்று, புதிய நீதிமன்ற கட்டுமான பணிக்கான அடிக்கல் கல்வெட்டை திறந்து வைத்தார். இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி செம்மல், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை தாண்டியது!
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை