'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையில் மாவட்டம் முழுதும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலும், மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, ஆற்பாக்கம் - மாமண்டூர் செல்லும் சாலை சந்திப்பில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது .இதில் உள்ள ஒரு கேமரா தலை சாய்ந்த நிலையில் உள்ளது.
இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் உள்ளது.
இதனால், இப்பகுதியில், 'சிசிடிவி' கேமரா அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது. எனவே, ஆற்பாக்கத்தில், தலை சாயந்த நிலையில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை தாண்டியது!
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை