தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

பிரதான கடவுப்பாதை மேம்பாலங்களின் இருபுறமும், சவுடு மண்ணை கொட்டி நிரப்பும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு, கீழம்பி, ஆரியபெரும்பாக்கம் ஆகிய பிரதான ஏரிகளில் ராட்சத இயந்திரங்களின் வாயிலாக மண்ணை அள்ளி டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்கின்றனர்.

இந்த மண் மீது, தார்ப்பாய் போட்டு மூடாமல் எடுத்து செல்லப்படுகிறது. லாரிகளில் அளவுக்கு அதிகமாக மண்ணை எடுத்து செல்லும் போது, மண் பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, டிப்பர் லாரிகள் மீது தார்ப்பாய் மூடி எடுத்து செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement