டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் படுகாயம்: வாகனம் தீக்கிரை

திருத்தணி,:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேட்டு குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி, 35. இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
நேற்று, வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராஜாமணி பணி முடிந்து, மதியம் உறவினர் தட்சிணாமூர்த்தியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, நாரணமங்கலம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருத்தணி அரசு கலைக்கல்லூரி அருகே சென்றபோது, எதிரே மேதினிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித், 22, என்பவரின் 'ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் ராஜாமணி, தட்சிணாமூர்த்தி, அஜித் உள்ளிட்ட மூன்று பேரும் படுகாயமடைந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய அஜித்தின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூன்று பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக ராஜாமணி, அஜித் ஆகிய இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் இருசக்கர வாகனம் முழுதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் சிப்பந்திகள் உத்சவம் விமரிசை
-
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
-
பழுதடைந்த பேருந்தால் மானாம்பதியில் பயணியர் அவதி
-
சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
-
தடுப்புச்சுவர் இல்லாத கடல்மங்கலம் பாலம்
-
தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்