குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

மாகரல்:மாகரல் ஊராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில், அப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரு மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் தேங்கியுள்ள நீர் பாசி படர்ந்த நிலையில் உள்ளது. நாள் கணக்கில் தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, மாகரல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement