சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம்:கிராம ஊராட்சிகளில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 22ல், கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நிர்வாக காரணங்களுக்காக, 23ம் தேதிக்கு, கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின், இரண்டாவது முறையாக நிர்வாக காரணங்களுக்காக 29க்கு மாற்றப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் உள்ள, 274 ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நேற்று நடந்தது.
மழைநீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற விஷயங்கள், முக்கிய விவாத பொருளாக கிராம சபையில் நேற்று பேசப்பட்டது. இதுசம்பந்தமாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சியில் நேற்று கிராமசபை கூட்டம், ஊராட்சி தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது. காலுார் காலனியில் காத்திருப்போர் கூடம் அமைப்பது. வேடல் கிராமம் பஜனை கோவில் தெருவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பது எனவும், 2025- - 26 நிதியாண்டில், காலுார் ஏரியில் இருந்து ஆசூர் ஏரி வரத்து கால்வாய் துார்வாருவது, காலுார் அருகே பாலாற்றங்கரை, அம்மா பூங்கா, பெரிய நத்தம், வேடல் கிராமத்தில் உள்ள புதிய குளக்கரை உள்ளிட்ட இடங்களில் மரக்கன்று நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. பெரியநத்தம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டடவும் தீர்மானிக்கப்பட்டது.
திம்மசமுத்திரம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சியில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அங்கம்பாக்கத்தில், அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தமையில் கூட்டம் நடந்தது. அங்கம்பாக்கம் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளதால், அதன் அருகாமையில் உள்ள தம்மனுார் கிராமத்தில் புதியதாக தனியார் கல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இதன் மூலம் விவசாயத்தை பாதுகாத்து, சுற்றுசூழல் மாசு ஏற்படாமல் தடுக்கக்கூடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழையசீவரம் ஊராட்சியில் தலைவர் மகாலட்சுமி தலைமையில் கூட்டம் நடந்தது. ஊராட்சிக்குட்பட்ட சங்கராபுரம், லிங்காபுரம் மற்றும் பழையசீவரம் ஆகிய கிராமங்களில், வளர்ச்சி திட்டங்களுக்கான புதிய பணிகள் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊத்துக்காடு ஊராட்சியில் தலைவர் சாவித்திரி தலைமையில் கூட்டம் நடந்தது. அப்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் புதிய வீடுகள் கட்ட 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டது. வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புத்தாகரம் ஊராட்சியில், தலைவர் நந்தக்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் ஆதாரம் ஏற்படுத்துதல், புத்தகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பழுதான கட்டடத்தை அகற்றி புதிய பள்ளி வகுப்பறை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12வது முறையாக தீர்மானம்காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், உலக தண்ணீர் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று, நடந்தது.இந்த கூட்டத்திற்கு, ஏகனாபுரம் ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். கிராம சபை கூட்டத்தின் பற்றாளராக ஹரிதாஸ் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பரந்துார் விமான நிலையத்தால், பறிபோகும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். ஏகனாபுரம் ஊராட்சி செயலர், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பரந்துார் விமான நிலையம் வேண்டாம் என, 12வது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை தாண்டியது!
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை