விண்ணப்பித்ததோ 17,629 பேர்; தேர்வு செய்யப்பட்டதோ 2295 பேர் ஏ.ஏ.பி.சி.எஸ்., திட்டத்தில் 85 சதவீதம் மனுக்கள் தள்ளுபடி

மதுரை: தமிழகத்தில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் தொழில் துவங்க விண்ணப்பித்த 17, 629 பேரில் நிதி பற்றாக்குறையால் 2295 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 2023-24ம் நிதியாண்டில் இருந்து 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' என்னும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் கருவிகள், இயந்திரங்களை கொள்முதல் செய்ய 35 சதவீதம் மூலதன மானியமும், 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2023-24ம் நிதியாண்டில் இருந்து 21 மாத காலக்கட்டத்தில் 17,629 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2295 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது. மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் இதுகுறித்து தகவல்களை பெற்றுள்ளார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1032 பேர் விண்ணப்பித்த நிலையில் 135 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 பேரும், தேனியில் 10 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் அனைவருக்கும் சென்றடையும் வகையில் கூடுதல் நிதியாக ரூ.500 கோடி வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு 10 ஆயிரம் பயனாளர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிப்பின் காரணங்களை அறிய குழு அமைக்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட காரணங்களை இணையதளத்தில் 'அப்லோடு' செய்ய வேண்டும் என்றார்.
மேலும்
-
நடுவானில் விமானம் டயர் வெடித்தது; சென்னையில் அவசர தரையிறக்கம்!
-
பெண் தொழில்முனைவோருக்கு அடைக்கலம் தரும் ஆண்டாள்
-
ஏ.டி.எம்., கட்டணம் உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!
-
ஈரோட்டில் ஆசிட் டேங்கர் சுத்தம் செய்தபோது விபரீதம்; 2 பேர் உயிரிழப்பு
-
ஆப்கன் தலிபான்கள் கஸ்டடியில் இருந்த அமெரிக்கப் பெண் விடுதலை
-
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை