ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம்

மதுரை: மதுரையைச் சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி 60, இயக்குநர் பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமாகி நடிகர் விஜய்யின் பத்ரி படத்தில் கராத்தே மாஸ்டராக நடித்து 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளார்.

ரத்தப்புற்றுநோய் காரணமாக சென்னையில் இறந்த அவரது உடல் நேற்று காலை மதுரை கிரைம் பிராஞ்ச் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் காஜிமார் தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement