1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்., 7 முதல் 17ம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 18ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பிக்கிறது. ஏற்கனவே ஏப் 21ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த தேர்வு அட்டவணையில் மாற்றப்பட்டு உள்ளது.
இது குறித்து, தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.,9ம் தேதி முதல் ஏப்.,21ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக முதல்வரின் உத்தரவின் படியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
வரும் ஏப்., 7 முதல் 17ம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும்
-
சொத்துத் தகராறில் தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பயங்கரம்
-
உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்; பிரதமர் மோடி
-
உடுமலை அருகே விஷவாயு தாக்கி ஒடிசாவைச் சேர்ந்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு
-
பார்லிமென்டில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல்
-
குஜராத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 13 பேர் பலி; 6 பேர் காயம்
-
நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை: கலெக்டர் அறிவிப்பு