டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா கோல்கட்டா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

புதுடில்லி:டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மாவை கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

மார்ச் 27 அன்று நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


நீதிபதி சர்மா 1992 இல் டில்லி நீதித்துறை சேவையில் சேர்ந்தார், 2003 இல் உயர் நீதித்துறை சேவைக்கு பதவி உயர்வு பெற்றார். டில்லி உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் புது டில்லி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.


காமன்வெல்த் நீதித்துறை கல்வி நிறுவனத்தின் உறுப்பினரான இவர், சுப்ரீம் கோர்ட் மத்தியஸ்த திட்டத்தின் கீழ் மத்தியஸ்தர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார். பிப்ரவரி 28, 2022 அன்று டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

Advertisement