அரசியல் ஸ்டண்ட்களை ஓரம் வைத்துவிட்டு தமிழகத்தை காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு இ.பி.எஸ்., அறிவுரை

சென்னை: ''இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் அரசியல் ஸ்டண்ட்களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் அதிகார வரம்பில் இருக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள் ,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் முத்துக்குமார் என்ற போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போலீசாருக்கே பாதுகாப்பு துளியும் இல்லாத மாடல் தான் ஸ்டாலின் மாடல்.
மக்களுக்கும், மக்களைக் காக்க வேண்டிய போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சி என்பது செயலற்ற வெறும் பொம்மை ஆட்சியே!
தங்கள் பணிகளை செய்யும் போலீசாரின் பாதுகாப்பு பறிபோவதற்கு போலீஸ்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சினிமா வசனம் மற்றும் வெட்டி பேச்சு பேசும் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும்!
முதல்வர் ஸ்டாலின் அவர்களே- இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் Political Stunt-களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் Jurisdiction-ல் இருக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள்!
முத்துக்குமார் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் , அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் , உரிய நிதி உதவியும் வழங்கிட ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.







மேலும்
-
கடும் வெப்பம் எதிரொலி வெறிச்சோடியது தேக்கடி
-
பராமரிப்பு இல்லாத செரப்பனஞ்சேரி கோவில் குளம்
-
'பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை': * சொல்கிறார் தினகரன்
-
வைகை அணை அருகே புதிய அணை தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தகவல்
-
பழவேரியில் கனரக வாகனங்களால் மண் புழுதி சாலையில் தண்ணீர் தெளிக்க வலியுறுத்தல்
-
தேனி வாலிபரிடம் திருமண ஆசை காட்டி ரூ. 88.58 லட்சம் மோசடி நால்வர் கைது