பிளஸ்1 பொதுத்தேர்வு நிறைவு எளிதாக இருந்ததாக மகிழ்ச்சி

கோவை: பிளஸ்1 பொதுத் தேர்வு நேற்று நிறைவடைந்த நிலையில் மூன்று பாட தேர்வுகளும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த, 3 முதல், 25ம் தேதி வரை நடந்தது. பிளஸ்1 வகுப்புக்கு கடந்த, 5ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. பிளஸ்1 தேர்வை, 366 பள்ளிகளை சேர்ந்த, 36 ஆயிரத்து, 664 மாணவர்கள், 128 மையங்களில் எழுதினர். நிறைவு நாளான நேற்று, வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்கள் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Advertisement