இடுகாட்டுக்கு இழுத்து சென்று சிறுமி பலாத்காரம்

காஜியாபாத்: உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம், மோடி நகரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்ரேல் என்பவரும் நண்பர்கள்.

கடந்த 24ம் தேதி சிறுமியை அலைபேசியில் அழைத்த நபர், பேச வேண்டும் என கூறி வீட்டருகே வரச் சொல்லியுள்ளார். அறிமுகமான நபர் என்பதால் சிறுமியும் அவரை காணச் சென்றார்.

அங்கு, தன் நண்பர் அஷரப் என்பவருடன் வந்த இஸ்ரேல், தனியாக நின்றிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி அருகில் உள்ள இடுகாட்டிற்கு இழுத்துச் சென்றார்.

அங்கு, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அஷரப் காவலுக்கு நின்றுள்ளார்.

நடந்த சம்பவத்தை சிறுமி வீட்டில் வந்து தன் தாயிடம் தெரிவித்தார். தப்பி ஓடிய இஸ்ரேல் மற்றும் அஷ்ரபை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement