வறட்சியால் தரையிறங்கும் காட்டு மாடுகள்
வடமதுரை : வடமதுரை பகுதியில் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் புகும் காட்டு மாடுகளால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முடிமலை, பண்ணமலை, மாங்கோம்பை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுமாடுகள் வாழ்கின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சியால் நீருற்றுகள் அனைத்தும் வறண்டுள்ளன.
இதனால் காட்டுமாடுகள் நீர், உணவு தேடி மலைப்பகுதியையொட்டி விவசாய தோட்டங்கள், வீடுகளை தேடி இறங்கி வருகின்றன. வயலில் கிடைக்கும் பயிர்களை உண்ணுவதால் விவசாயிகளும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
சிலநேரங்களில் காட்டு மாடுகளை விரட்ட முயலும் பொதுமக்களை அவைகள் தாக்குகின்றன. சில நாட்களுக்கு முன்னர் வடமதுரை எலப்பார்பட்டி, எர்ணாசமுத்திரம், குதுப்பணம்பட்டியில் ஒரு காட்டு மாடு தென்பட்ட நிலையில், நேற்று காலை 3 மாடுகள் உலா வந்தன. அய்யலுார் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு மாடுகளை மீண்டும் மலைப்பகுதிக்கு திருப்பும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ