ஆட்டோ கட்டணம் உயர்த்த தடை விதிப்பு
பெங்களூரு: 'ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கூடாது' என, பெங்களூரு நகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆட்டோ பயண கட்டணத்தை உயர்த்த வேண்டும். தற்போது ஒரு கி.மீ.,க்கு 15 ரூபாயாக உள்ளது. இதை 20 ரூபாயாக உயர்த்த வேண்டும். 2 கி.மீ., க்கு 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள், பெங்களூரு நகர மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தன.
ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை ஏற்கப்படலாம். ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என, கூறப்பட்டது.
ஆட்டோ பயண கட்டண உயர்வு குறித்து, கிழக்கு போக்குவரத்து பிரிவு டி.சி.பி., அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இச்சூழ்நிலையில் ஆட்டோ பயண கட்டணத்தை உயர்த்தினால், மக்களுக்கு சுமை அதிகரிக்கும். எனவே உயர்த்த கூடாது. இப்போது உள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.