வேளச்சேரியில் எரிந்த மின்மாற்றி

வேளச்சேரி:வேளச்சேரி விரைவு சாலை, ஏரி அருகில் ஒரு மின்மாற்றி உள்ளது. அதை ஒட்டி, நான்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.

நேற்று மதியம், தரையில் கிடந்த சேத மடைந்த மின்மாற்றி கேபிளில் தீ பிடித்தது. குப்பையாக கிடந்ததால், தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பகுதிமக்களும், தீயணைப்பு படையினரும் தீயை அணைத்தனர்.

இதனால், மின்மாற்றியில் பரவ வேண்டிய தீ தடுக்கப்பட்டது. வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement