முன்னாள் பேராசிரியர் வீட்டில் திருடிய பணிப்பெண் கைது

கே.கே., நகர்:விருகம்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராமன், 80; அண்ணா பல்கலையில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவருக்கும், இவரது மகளுக்கும் உடல் நிலை சரியில்லாததால், கிருஷ்ணவேணி மற்றும் ஜெயகாந்தன் ஆகிய இருவரை, வீட்டு வேலைக்கு வைத்தனர்.

கடந்த 22ம் தேதி, சுப்புராமன் தன் வீட்டு லாக்கரில் இருந்த நகைகளை சரி பார்த்த போது, 12.5 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்படி கே.கே., நகர் போலீசார் விசாரித்ததில், அவரது வீட்டில் தங்கி பணிபுரிந்த கிருஷ்ணவேணி மற்றும் ஜெயகாந்தன் ஆகிய இருவரும் சேர்ந்து, நகை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, 51, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 11.5 சவரன் நகை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெயகாந்தனை தேடி வருகின்றனர்.

Advertisement