சி.டி.ரவி நீக்கப்படலாம் காங்., - எம்.எல்.ஏ., ஆரூடம்
ஷிவமொக்கா: ''எத்னாலை தொடர்ந்து, வரும் நாட்களில் எம்.எல்.சி., ரவியும் கூட பா.ஜ.,வில் இருந்து நீக்கப்படலாம்,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேளூர் கோபால கிருஷ்ணா தெரிவித்தார்.
ஷிவமொக்காவில் நேற்று அளித்த பேட்டி:
ஹிந்து புலியை கூண்டில் அடைத்துள்ளனர். ஹிந்துத்வா குறித்து பேசியவர்களை, கட்சியில் இருந்து விலக்கி வைத்துள்ளனர். ஈஸ்வரப்பா, அனந்த் குமார் ஹெக்டே, பிரதாப் சிம்ஹா, எத்னாலை விலக்கி வைத்துள்ளனர். வரும் நாட்களில் எம்.எல்.சி., ரவியும் கட்சியில் இருந்து நீக்கப்படலாம்.
ஈஸ்வரப்பா சீட் கேட்டதால், அவரை ஓரங்கட்டினர். சீட் கேட்பது தவறா. ஈஸ்வரப்பா, எத்னாலையே பா.ஜ., விட்டு வைக்கவில்லை. ஹிந்துத்வா பற்றி பேசுவோரை விடுவரா. எத்னால் காங்கிரசை அதிகம் திட்டியுள்ளார். எடியூரப்பா மற்றும் அவரது பிள்ளைகளையும் திட்டியுள்ளார். எத்னால் கட்சியில் இருந்து நீக்கப்படுவது, புதிய விஷயம் அல்ல. இரண்டு முறை நீக்கப்பட்டிருந்தார். பா.ஜ.,வுக்கு தைரியம் இருந்தால், அவரை நிரந்தரமாக நீக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.