எரியாத தெரு விளக்குகள்; இருளில் மூழ்கிய சாலை

திருப்பூர் வளர்மதி பாலத்தை ஒட்டி, குமரன் ரோடு சிக்னல் முதல் நொய்யல் கரையை ஒட்டி, யுனிவர்சல் தியேட்டர் ரோடு அமைந்துள்ளது.

தற்போது எம்.ஜி.ஆர்., சிலை சுரங்கப் பாலம் பணி நடைபெற்று வருகிறது. யூனியன் மில் ரோடு, யுனிவர்சல் தியேட்டர் ரோடு வழியாக வந்து செல்லும் வாகனங்கள் இந்த ரோட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

கடும் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ள ரோடாக பயன்படுகிறது.இந்த ரோட்டில் உள்ள தெரு விளக்குகள் பெரும்பாலானவை எரிவதில்லை. எம்.ஜி.ஆர்., சிலை சுரங்கப்பாலம், ஈஸ்வரன் கோவில் வீதி உயர்மட்டப் பாலம் ஆகிய இரு இடங்களில் பாலம் பணிகளும் நடந்து வருகிறது. இதனால் ரோடு மோசமான நிலையில் உள்ளது. கட்டுமானப் பணி காரணமாகவும் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. தெரு விளக்குகளும் எரியாமல், இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனப் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் நிலவுகிறது. பாதசாரிகளும் திண்டாட்டத்துக்கு ஆளாகின்றனர்.

Advertisement