ராமாயணமே வாழ்க்கை நெறிமுறை பயிற்றுவித்தது சமஸ்கிருத பாரதி

கோவை; சம்ஸ்கிருத பாரதி மற்றும் மத்திய சம்ஸ்கிருத பல்கலை இணைந்து, ராமாயணத்தில் உள்ள வாழ்க்கை நெறிமுறைகளையும், தர்மத்தின் நடைமுறைகளையும் பற்றிய இரண்டு நாள் ஆன்மிக சொற்பொழிவை, பாரதிபார்க் 8வது கிராஸிலுள்ள வித்யா பாரதி அரங்கில் நடத்தியது.

இதில் மைசூரிலிருந்து வருகை தந்த ஆன்மிக சொற்பொழிவாளரும், வேதாந்தியுமான பிரபாகர ஷர்மா, ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மைகளை பற்றி எடுத்துரைத்தார். பகவான் ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை முறைகளை விளக்கினார்.

அதையே வாழ்க்கை முறையாக பின்பற்றி, சமுதாய சேவையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார். சம்ஸ்கிருத பாரதி மண்டலத் தலைவர் டாக்டர் மாதவன், பகவான் ஸ்ரீராமரின் தர்மத்திற்கான கட்டுப்பாட்டை முன்னிலைப்படுத்தி உரை நிகழ்த்தினார்.

சென்னையைச் சேர்ந்த விவேகானந்தா கல்லூரியின், ஓய்வு பெற்ற சம்ஸ்கிருதத் துறை தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் மற்றும் கேரளாவிலிருந்து வந்த சம்ஸ்கிருத அறிஞர் டாக்டர் நாராயணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். திரளானோர் சொற்பொழிவில் பங்கேற்றனர்.

Advertisement