ஒற்றைக்கண் பாலத்தில் வாகன நெருக்கடி

திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டிலிருந்து ஒற்றைக் கண் பாலம் ரயில்வே பாதையைக் கடந்து செல்லும் வகையில் உள்ளது.

பாலம் அருகேயுள்ள ரயில்வே கேட் ஒன்று நிரந்தரமாக மூடப்பட்டதாலும், இரண்டாவது ரயில்வே கேட், ரயில்கள் கடந்து செல்லும் போது தொடர்ந்து மூடப்படுவதாலும், அதிகளவிலான வாகனங்கள் இந்த பாலம் வழியாகச் சென்று வருகின்றன.பாலத்தின் ஒரு பகுதியில் கழிவு நீர் கால்வாய் கடந்து செல்கிறது.

இதனால், பாலம் வழியாக ஒரு கார் மட்டுமே கடந்து செல்லும் வகையில் இடம் உள்ளது. ெபரும்பாலான நேரங்களில் இந்த பாலம் அருகே வாகனங்கள் அதிகளவில் செல்வதாக நெருக்கடி ஏற்பட்டு, நெரிசல் ஏற்படுவது சகஜமாக உள்ளது.பாலத்தின் வடக்கு பகுதியில் சில மாதங்கள் முன் வரை, ஒரு வழிப்பாதை முறை பயன்பாட்டில் இருந்தது.

இதனால், வாகனங்கள் இடையூறின்றி கடந்து செல்ல வசதியாக இருந்தது. தற்போது இங்கு வாகனங்கள் எந்த கட்டுப்பாடுமின்றி புகுந்து வெளியேற முயற்சிப்பதால் நெரிசல் ஏற்படுவது சகஜமாக உள்ளது.

Advertisement