இன்று ரம்ஜான் பண்டிகை; பள்ளிவாசல்களில் தொழுகை
கோவை; ஷவ்வால் பிறை நேற்று மாலை தெரிந்ததை அடுத்து, ஈது பெருநாளான ரம்ஜான் பண்டிகை, இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் என்று, கோவை மாவட்ட அனைத்து ஜமாத் அறிவித்துள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுசெயலாளர் முஹம்மதுஅலி அறிக்கை:
ஹிஜிரி 1446ம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தின், 29வது நாள் இன்று(நேற்று) (ஞாயிற்றுக்கிழமை) மாலை நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை காணும் நிகழ்வு, அனைத்து ஜமாத் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்றன. ரத்தினபுரி நால்வர் லே அவுட் தாருல் குர் ஆன் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில், நேற்று மாலை பிறைபார்க்கும் நிகழ்வு நடந்தது.
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் தலைவர் காஜா முஹைதீன், பொதுச்செயலாளர் முஹம்மது அலி உள்ளிட்ட நிர்வாகிகள், ஷவ்வால் பிறை பார்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும், கோவையிலும் ஷவ்வால் பிறை தெரிந்ததையடுத்து நாளை (இன்று) ஈது பெருநாள் கொண்டாடப்படும். பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும்.
இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்