தேர் விபத்து 2 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'

ஆனேக்கல்: பெங்களூரு, ஆனேக்கல் தாலுகா, ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா கோவில் திருவிழா கடந்த 22ம் தேதி நடந்தது. இதில், 100 அடி உயரம் கொண்ட தேர், சாலையில் வரும் போது, சாய்ந்து விழுந்தது. இதில் பெங்களூரு, தமிழகத்தை சேர்ந்த இருவர் இறந்தனர்.

இது குறித்து ஆனேக்கல் தாசில்தார், மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தார். இதன்படி, மாவட்ட நீதிபதி ஜெகதீஷ், அலட்சியமாக செயல்பட்ட வருவாய் ஆய்வாளர் பிரசாந்த், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Advertisement