நுால் மதிப்புரை கூட்டம்

மதுரை : மதுரை வாசகர் வட்டம் சார்பில் நுால் மதிப்புரை கூட்டம் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சண்முகவேலு தலைமை வகித்தார். பேராசிரியர் ராமமூர்த்தி கடந்த மாத செயல்பாடுகளை அறிக்கையாக அளித்தார். எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், 'ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ஆழமான கேள்விகள், அறிவார்ந்த பதில்கள் என்ற நுாலுக்கு மதிப்புரை வழங்கினார்.



தலைமை ஆசிரியர் ஷேக்நபி, கவிஞர் ரவி, பட்டிமன்ற பேச்சாளர் சிவசத்யா பேசினர். கலந்துரையாடலில் ஆசிரியர் அழகுராஜ், வாசகி பிரியதர்ஷினி பங்கு பெற்றனர். மாணவர் தேவராஜ்பாண்டியன் நன்றி கூறினார். வழக்கறிஞர் அசோகன், வாசகர் ராமசாமி, பேராசிரியர் லட்சுமணன் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement